லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரைத் தொடர்ந்து சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்தின் முக்கிய சண்டைக்காட்சி ஒன்று தற்போது படமாக்கப்பட்டுவருகிறதாம். இந்தப் படப்பிடிப்பில் நடிகர் சஞ்சய் தத் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் டீசர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற ஜுன் 22 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துவருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக இந்தப் படத்தை லலித் குமார் தயாரித்துவருகிறார்.
விக்ரம் படத்தில் ரோலேக்ஸ் என்ற வேடத்தில் சூர்யா நடித்ததுபோல, இந்தப் படத்தில் சிறப்பு வேடத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறாராம். ரோலெக்ஸ் அளவுக்கு அழுத்தமான வேடத்தில் தனுஷ் இந்தப் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் இதற்காக 15 நாட்கள் கால்ஷீட் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 வருடங்களுக்கு பிறகு திரிஷா நடிக்கிறார். இதில் ஹைலைட் என்னவென்றால் விஜய்க்கு மட்டுமல்ல, திரிஷாவுக்கும் இது 67வது படமாம். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.