இன்று (03) காலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் அதிவேக வீதியில் சாதாரண பயணிகளை சட்டவிரோதமான முறையில் ஏற்றிச் சென்ற 4 பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்களை கைப்பற்றியதாக அதிவேக வீதி சுற்றுலா பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
கொட்டாவை அதிவேக வீதியின் நுழைவாயிலுக்கு அருகில் மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த சட்டவிரோத பேருந்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதிவேக வீதிகளில் பேருந்துகள் இயங்கும் போது, பேருந்துகளில் பயணித்தவர்கள் நின்று கொண்டிருந்தது தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உரிமம் பெற்ற பயணிகள் போக்குவரத்து பேருந்துகளின் உரிமையாளர்களால் மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு கிடைத்த தகவலின் படி அலுவலக போக்குவரத்து சேவையாக சாதாரண பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்துகளை கண்டுபிடித்துள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.