அத்துருகிரிய துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அத்துருகிரிய மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (29) பிற்பகல் முதல் மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்தது.
கோளாறு சீரமைக்கப்பட்டு மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.