அபாயகரமான செக்ஸ் பொசிஷன்..

Date:

விதவிதமான முறையில் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை சிலருக்கு ஏற்படுவது உண்டு. அதை செயல்படுத்தும் போது சில நேரங்களில், அது விபரீதத்தில் சென்று விட்டுவிடும். அப்படித்தான், இந்தோனேசியாவில் 37 வயது நபர் தனது பார்ட்னருடன் பாலியல் உறவில் ஈடுபட்டார். அப்போது, ரிவர்ஸ் கவ் கெர்ள் (Reverse Cowgirl) என்ற பொசிஷனில் இவர் தனது பார்ட்னருடன் உறவில் இருந்தார்.

அப்போது அவரது ஆணுறுப்பில் முறிவு ஏற்பட்டு உடைந்து போனது போல காயம் ஏற்பட்டுள்ளது. அவரது ஆணுறுப்பின் முனையில் இருந்து ரத்தம் கசிய தொடங்கியது. மேலும், அவரால் சிறுநீர் கழிக்க முடியவில்லை. இந்த திடீர் விபத்தால் பதறிப்போன அந்த நபர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து ஆணுறுப்பை சரி செய்தனர். முதலில் 3 நாள்கள் தீவிர சிகிச்சை வழங்கி பின்னர் டிஸ்சார்ஜ் செய்துள்ளனர்.

காயம் சரியாகும் வரை சிறுநீர் கழிக்க அவருக்கு catheter முறையில் டியூப் பொருத்தப்பட்டது. பின்னர், சில வாரங்களுக்கு அவர் தொடர் கண்காணிப்பில் இருந்த நிலையில், அவரின் ஆணுறுப்பு சீரானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவருக்கு சிறுநீர் கழிக்கவோ, குறி விரைப்பு ஏற்படுவதிலோ எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

இருப்பதிலேயே இந்த ரிவர்ஸ் கவ் கேர்ள் பொசிஷன் தான் மிகவும் அபாயகரமானது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆணுறுப்பில் ஏற்படும் சுமார் 50 சதவீத முறிவுகளுக்கு இந்த செக்ஸ் பொசிஷன் தான் காரணம் என பிரபல டிக்டாக் மருத்துவர் கரண் ராஜ் தெரிவிக்கின்றார். அதேவேளை 2017ஆம் ஆண்டில் வெளியான Journal of Impotence Research ஆய்வு அறிக்கையின்படி,  டாக்கி ஸ்டைல் பொசிஷன் தான் மிகவும்  அபாயமானது என்று தெரிவிக்கிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...