அபிஷேக், கால்சன் அதிரடி

Date:

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 40வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதுகின்றன. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, மயங்க் அகர்வால் களமிறங்கினர். அகர்வால் 5 ரன்னில் வெளியேறினார்.

அடுத்துவந்த திரிபாதி 10 ரன்னிலும், கேப்டன் மார்க்ரம் 8 ரன்னிலும், ஹெரி புரோக் ரன் எதுவும் எடுக்காமலும் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

களமிறக்கிய ஹென்ட்ரிச் கால்சனுடன் ஜோடி சேர்ந்த தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அபிஷேக் சர்மா 36 பந்துகளில் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அப்துல் சமாத் உடன் ஜோடி சேர்ந்த கால்சன் அதிரடி காட்டினார். கால்சன் 27 பந்துகளில் 4 சிக்சர் 2 பவுண்டரி உள்பட 53 ரன்கள் குவித்தார். சமாத் 21 பந்துகளில் 28 ரன்கள் குவித்தார். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் குவித்தது.

டெல்லி தரப்பில் அந்த அணியின் மிச்செல் மார்ஷ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய டெல்லி தற்போது விளையாடி வருகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...