கருங்கடலுக்கு மேலாகப் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானமொன்றுடன் ரஷ்ய போர் விமானமொன்று மோதியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் போரில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான நேரடி மோதல் தோற்றம் பெறுவதற்கான அச்சுறுத்தலை இந்தச் சம்பவம் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சர்வதேச வான் பரப்பில் வழமையான கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இரு ரஷ்ய போர் விமானங்கள் அதனை இடைமறிக்க முற்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சூழ்ச்சியொன்றின் மூலமே குறித்த ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதாக கூறும் ரஷ்யா,
இரு போர் விமானங்கள் நேரடியாக மோதியதாக அமெரிக்கா தெரிவிக்கும் கருத்தை நிராகரித்துள்ளது.
வானூர்தி பயணிக்கும் வழித்தடத்தைக் கண்டறியப் பயன்படும் தொடர்பாடல் சாதனமின்றியே, அமெரிக்காவின் MQ-9 Reaper ஆளில்லா விமானம் பயணித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.