இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்… இது குறித்த அவர் டுவிட்டர் பதிவில்,
“திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக் கொண்டிருப்பதாகக்” குறிப்பிட்ட அவர், இ, ளை, ய, ரா, ஜா ஆகிய 5 தான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக் கொண்டவர் அவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். இன்று பிறந்த நாள் காணும் இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துவதாக கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.