இதுபோதும் எனக்கு இதுபோதுமே….

Date:

16வது ஐபிஎல் இறுதிப்போட்டி கடந்த 29ம் திகதி நள்ளிரவு நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை குஜராத் அணி எதிர்கொண்டது. இந்த ஐபிஎல் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன் 8 போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடினார்.

ஐபிஎல் தொடரில் இதுவரை மொத்தம் அவர் 362 ஓட்டங்கள் எடுத்துள்ளார். நடைபெற்ற இறுதிப்போட்டியில் சாய் சுதர்சன் 47 பந்துகளில் 96 ஓட்டங்கள் எடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

இந்நிலையில், சாய் சுதர்சனுக்கு நியூசிலாந்து நட்சத்திர வீரர் வில்லியம்சன் மெசேஜ் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

அந்த மெசேஜ் குறித்து சாய் சுதர்சன் பேசுகையில், இறுதிப்போட்டி நடந்துக்கொண்டிருந்தபோது, பதிரானாவின் கடைசி ஓவரில் எக்ஸ்டிரா கவர் திசையில் அடித்த சிக்சர் ஷாட் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. சூப்பரான ஷாட் அது. என் மீது அணி நிர்வாகம் ரொம்ப நம்பிக்கை வைத்தது. அதனால் நான் என்னுடைய திறமை காட்டினேன். 47 பந்துகளில் 96 ஓட்டங்கள் எடுத்து நான் அவுட்டானபோது, நான் ஓய்வறை நோக்கி சென்றுக்கொண்டிருந்தேன்.

அப்போது, அணி வீரர்கள் அனைவருமே எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்றனர். அதை இப்போது நினைத்தால்கூட எனக்கு மெய்சிலிர்க்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் காயத்தால் இப்போட்டியை விட்டு வெளியேறினார்.

அவருக்கு பதிலாக என்னை சேர்த்தனர். சமீபத்தில் எனக்கு ஒரு மெசேஜ் வில்லியம்சனிடமிருந்து வந்தது. கிரிக்கெட்டைப் பற்றி எதாவது சந்தேகம் இருந்தாலும் என்னிடம் தயங்காமல் ஆலோசிக்கலாம். அன்று முதல் இப்போது வரை நான் அவரிடம் பேசி வருகிறேன்.

இறுதிப்போட்டி குறித்து அவர் என்னிடம் பேசும்போது, சாய் சுதர்சன் நீ ரொம்ப நல்லா விளையாடினாய். உன் ஆட்டத்தைப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். நான் விட்டுச் சென்ற பணியை சிறப்பாக செய்தார். உன் மீது எனக்கு நம்பிக்கை வந்துள்ளது. வரும் ஆண்டுகளில் சிறப்பாக விளையாட முயற்சிக்க வேண்டும் என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...

மகளிர் ஆசிய கோப்பை: இந்தியா வெற்றிபெற 109 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையின் தம்புள்ளவில் இன்று...

சர்வதேச தரத்தில் ஹிப்ஹாப் தமிழாவின் கடைசி உலகப் போர் – கிளிம்ப்ஸ் வீடியோ

2015 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான...

ஜப்பானில் அனுர..

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க...