இந்தோனேசியாவில் அமைந்துள்ள பாலி தீவின் தெற்கு பகுதியில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இவை முறையே 5.6 மற்றும் 5.0 புள்ளிகளாக பதிவானது.
இதனால் வீடுகள், அலுவலகங்களில் இருந்தவர்கள் லேசான அதிர்வினை உணர்ந்தனர். எனவே பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்புக்காக வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. எனினும் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.