இன்றைய ராசிபலன் – 11 ஜூலை 2023

Date:

மேஷம்:

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய யோசனைகள் எல்லாம் உதிக்க கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. புதுமைகளை படைக்கும் அற்புதமான நாள் என்றே சிலருக்கு அமையும். குடும்ப பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். சொந்த முயற்சிகளுக்கு வெற்றி உண்டு.

ரிஷபம்:

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கை மேல் பலன் தரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. நினைத்ததை நினைத்தபடி சாதிப்பீர்கள். கல்லுக்குள் ஈரம் போல உங்களுக்குள்ளும் கருணை கசியும். பயணங்களின் பொழுது கவனமுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

மிதுனம்:

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்தது பூர்த்தி அடைய கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியை தள்ளி போடுங்கள். பொறுப்புகளில் இருந்து பின்வாங்காதீர்கள்.

கடகம்:

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று செய்யப் போய் வேறொன்றாக முடியும் எனவே அவசரப்படாதீர்கள். எதிலும் கண்ணும் கருத்துமாக செயல்படுவது நல்லது. சுப காரியம் முயற்சிகளில் உள்ளவர்களுக்கு அதிக அலைச்சல் காணப்படும். தாய் வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம்.

சிம்மம்:

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்றத்தை தரும் வகையில் இருக்கும். வீண் பொழுதுபோக்குகளில் ஈடுபடாமல் பயனுள்ள விஷயங்களை செய்வது நல்லது. மனதில் பட்டதை அப்படியே பேசி விடுங்கள் நன்மைகள் நடக்கும்.

கன்னி:

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தையில் புதிய யுத்திகள் தென்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுற்றி இருக்கும் எதிரிகளின் சூழ்ச்சிகள் முறியடிக்கப்படும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் காலதாமதம் செய்வது நல்லது.

துலாம்:

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே அன்னோன்யம் கூடும். தேவையில்லாத நேர விரையம் செய்யாதீர்கள். குடும்பத்தில் சுப பேச்சு வார்த்தைகள் நிகழ்வதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம்.

விருச்சிகம்:

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையால் பல நன்மைகளை அடையப் போகிறீர்கள். தேவையில்லாத எதிரிகளை வளர்த்து விடாதீர்கள். வாயை கட்டுப்படுத்தினால் சகலமும் உங்கள் வசமாகும். குடும்ப ஒற்றுமைக்கு குறைவிருக்காது.

தனுசு:

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் நிறைந்த நல்ல அமைப்பாக இருக்கிறது. மனதில் இருக்கக்கூடிய கவலைகள் நீங்கி உற்சாகத்துடன் இருப்பீர்கள். சகோதர சகோதரிகளுடைய ஆதரவு தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். உங்களுக்கு எதிரான விமர்சனங்களை கண்டு பதில் அளிக்காமல் இருப்பது நல்லது.

மகரம்:

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் சாதிக்கக்கூடிய எண்ணம் உங்களுக்கு மேலோங்கி காணப்படும். முடியாது என்று நினைத்த ஒரு காரியம் முடியும். விலகி சென்ற நபர்களை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். எதிர்பாராத பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள்.

கும்பம்:

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சுய புத்தியால் முடிவெடுப்பது நல்லது. மகுடிக்கு மயங்கிய பாம்பை போல அடுத்தவர்களின் பேச்சைக் கேட்டு மயங்காதீர்கள். கணவன் மனைவிக்குள் சண்டைகளை தவிர்ப்பது நல்லது. பொருளாதாரம் ஏற்றம் தரும். பணப் புழக்கம் அதிகரிக்கும்.

மீனம்:

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. வரவேண்டிய பழைய பாக்கிகள் அனைத்தும் வசூல் ஆகும். ஒரு விஷயத்திற்காக பணத்தை சேமித்தால் அது வேறு ஒரு விஷயத்திற்கு செலவாகும் அபாயம் உண்டு. நண்பர்கள் உதவிக் கரம் கிட்டும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கிரிக்கெட் வாழ்க்கையில் காயம் இல்லாமல் விளையாடியது எனது அதிர்ஷ்டம்- ஆண்டர்சன் நெகிழ்ச்சி

இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி...

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட்- முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 371 ரன்னில் ஆல் அவுட்

வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

அமீரகத்தின் முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை… பின்னணியில் தந்தையின் பாச போராட்டம்..!

இன்றைய காலக்கட்டத்தில் உறவுக்குள் இருக்கும் பாசம் குறைந்து பணத்திற்கு மதிப்பு தருவதாக...

யூரோ கோப்பை: பிரான்ஸ்-ஐ வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின்

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி...