இன்றைய ராசிபலன் 30.04.2023

Date:

மேஷம்

புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை எல்லாம் குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

ரிஷபம்

அரசு காரியங்கள் சாதகமாக முடியும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சில சூழ்ச்சிகளை கற்றுக் கொள்வீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மிதுனம்

சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனையை தருவீர்கள். வெற்றியைத் தரும் நாள்.

கடகம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன் – மனைவிக்குள் இருந்த பிணக்குகள் விலகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு உதவுவார்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

சிம்மம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன் -மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சிலர் உங்களை குறை கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

கன்னி

திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

துலாம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் ஏற்பீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

விருச்சிகம்

மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். மனைவி வழியில் நல்ல நன்மைகள் உண்டாகும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள், சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் இன்று சாதிக்கும் நாள்.

தனுசு

கடந்த 2 நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன் குறைந்து மனதில் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பாதியில் நின்ற வேலைகள் முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

மகரம்

சந்திராஷ்டமம் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். வியாபாரத்தில் பெரிய இழப்புகள் ஏற்படக் கூடும். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

கும்பம்

சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரர்கள் வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

மீனம்

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கிரிக்கெட் வாழ்க்கையில் காயம் இல்லாமல் விளையாடியது எனது அதிர்ஷ்டம்- ஆண்டர்சன் நெகிழ்ச்சி

இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி...

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட்- முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 371 ரன்னில் ஆல் அவுட்

வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

அமீரகத்தின் முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை… பின்னணியில் தந்தையின் பாச போராட்டம்..!

இன்றைய காலக்கட்டத்தில் உறவுக்குள் இருக்கும் பாசம் குறைந்து பணத்திற்கு மதிப்பு தருவதாக...

யூரோ கோப்பை: பிரான்ஸ்-ஐ வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின்

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி...