இன்றைய ராசிபலன் 30.05.2023

Date:

மேஷம்

உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்லதீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். பணவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.

ரிஷபம்

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம் – பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள், சக ஊழியர்கள் உங்களை ஆதரிப்பார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

மிதுனம்

பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பண விஷயத்தில் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

கடகம்

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சொத்துப் பிரச்னை ஒன்று தீரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

சிம்மம்

இதுவரை இருந்த அலைச்சல் டென்ஷன் கோபம் யாவும் நீங்கும். மனதில் நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

கன்னி

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். கணவன் – மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவது நல்லது. யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

துலாம்

திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.

விருச்சிகம்

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் விருப்பங்கள் நிறைவேறும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

தனுசு

சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். நெருங்கியவர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதித்துக் காட்டும் நாள்.

மகரம்

கணவன் – மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள் உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். தொழில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

கும்பம்

சந்திராஷ்டமம் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலி பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். விட்டுக் கொடுக்க வேண்டிய நாள்.

மீனம்

கடினமான வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். மனைவி மற்றும் சகோதரர்கள் வகையில் பயனடைவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். பண விஷயத்தில் நீங்கள் கண்டிப்பாக இருக்கவேண்டும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கிரிக்கெட் வாழ்க்கையில் காயம் இல்லாமல் விளையாடியது எனது அதிர்ஷ்டம்- ஆண்டர்சன் நெகிழ்ச்சி

இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி...

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட்- முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 371 ரன்னில் ஆல் அவுட்

வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

அமீரகத்தின் முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை… பின்னணியில் தந்தையின் பாச போராட்டம்..!

இன்றைய காலக்கட்டத்தில் உறவுக்குள் இருக்கும் பாசம் குறைந்து பணத்திற்கு மதிப்பு தருவதாக...

யூரோ கோப்பை: பிரான்ஸ்-ஐ வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின்

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி...