திருகோணமலை – திருக்கடலூர் மற்றும் விஜிதபுர பகுதிகளைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையே நேற்று மாலை இடம்பெற்ற மோதலில் 5 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில், 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை காவல்துறை தெரிவித்துள்ளது.
மீன்பிடி தொடர்பான முறுகலே இந்த மோதலுக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பகுதியில், தொடர்ந்தும் பாதுகாப்பு பலப்படுத்துப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.