இரண்டு குழந்தைகளையும் பாலத்தில் விட்டுவிட்டு பென்தர ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அங்கு தனது 18 மாத மகளையும், ஒன்பது வயது மகனையும் பாலத்தில் விட்டுவிட்டு பெந்தர ஆற்றில் குதித்துள்ளார்.
பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண், எல்பிட்டிய-உரகஸ்மன்ஹந்தி பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ள நிலையில், இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று (26) பிற்பகல் அவர் தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு பெந்தர பாலத்தில் விட்டுவிட்டு சுமார் 40 அடி உயரத்தில் இருந்து நீருக்குள் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்த்தேக்கத்தில் மூழ்கிய பெண்ணை, அருகில் நீர் விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளைஞர் காப்பாற்றியுள்ளார்.
பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண், மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளார்.
மேலும், அவரது இரண்டு குழந்தைகளும் அளுத்கம பொலிஸார் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பணியகத்தின் அதிகாரிகளின் பாதுகாப்பில் உள்ளனர்.
குறித்த பெண் தனது இரண்டு பிள்ளைகளுடன் கணவர் வசிக்கும் எல்பிட்டிய பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது, வீட்டுக்கு வேண்டாம் என குறித்த பெண்ணுக்கு கணவன் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தமையே பாலத்தில் இருந்து குதித்தமைக்கான காரணம் என தற்போது தெரியவந்துள்ளது.
பென்தர பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.