மாத்தறை பிரவுன்ஸ் ஹீல் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றிற்குள் நுழைந்து பணிப்பெண்கள் இருவரையும் தடியால் அடித்து கழுத்தை நெரித்து கொலைசெய்து, வீட்டில் இருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தறை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். .
பலடுவ, மாலிம்பட, அகலவத்தையை சேர்ந்த கொத்வில விதாரணகே நிமலாவதி (67) மற்றும் வல்கம மாதோட்டகம பகுதியைச் சேர்ந்த ஹேவா பின்னதுவாகே விமலாவதி (70) என்ற இரு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் வீட்டின் குளியலறையில் கொல்லப்பட்டதையடுத்து பொலிசாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, விசாரணைகளை ஆரம்பித்த மாத்தறை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ரொஷான் ஹெட்டியாராச்சி உள்ளிட்ட குழுவினர், அருகில் உள்ள வீடொன்றின் சிசிடிவி கமராக்களை சோதனை செய்து கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்தனர்.