இலங்கைக்கு கடத்தவிருந்த 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

Date:

மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரை இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து கியூ பிரிவு பொலிஸாரும், தனிப்பிரிவு பொலிஸாரும் வேதாளை கடற்கரை பகுதிக்கு விரைந்து சென்றனர்.

 

அப்போது வேதாளை தெற்கு கடற்கரை பகுதியில் ஒரு இடத்தில் கடல் அட்டைகள் பதப்படுத்தப்படுவதை கண்ட பொலிஸார் அவர்களை பிடிக்க முயன்ற போது, அங்கிருந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

 

இதையடுத்து பதப்படுத்திய சுமார் 250 கிலோ கடல் அட்டை மற்றும் அதை பதப்படுத்த பயன்படுத்திய பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த பொலிஸார் அவற்றை மண்டபத்தில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து மண்டபம் வனச்சரகர் மகேந்திரன் தலைமையிலான வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதோடு தப்பி ஓடிய கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.

 

வேதாளை கடற்கரை பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட இந்த கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்ததாகவும், அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.20 இலட்சம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...