இலங்கையின் முதலாவது தாலிக்கு பொன்னுருக்கல் மண்டபம் திறந்து வைக்கப்பட்டது

Date:

கொழும்பு செட்டியார் தெருவில் அமைந்திருக்கும் பிரபல தங்க நகை மாளிகையான பழமுத்து. முத்துக்கருப்பன் செட்டியார் ஜூவலர்ஸ் மூலமாக முதற்தடவையாக தாலிக்குப் பொன் உருக்கும் பிரத்தியேக இடமொன்று நேற்று (16) சுப நேரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக பொது முகாமையாளர் காத்தமுத்து ஜெகதீஸ் தெரிவித்தார்.

பழமுத்து முத்துக்கருப்பன் செட்டியார் ஜூவலர்ஸின் பிரத்தியேகமான பொன்னுருக்கு மணவறையின் திறப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை (16) முற்பகல் செட்டியார் தெருவில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் இடம்பெற்றது.

இதன்போது, கருத்து தெரிவித்த பொதுமுகாமையாளர், “குறிப்பாக ஆரம்ப காலத்தில் ஆண் – பெண் பெயர்களை தலை ஓலையொன்றில் எழுதி அதை ஒரு மஞ்சள் கயிற்றினால் சுருட்டி பெண்கள் கழுத்தில் கட்டி வந்தனர். பின்னாளில் அது தாலி என அழைக்கப்பட்டது.

இவ்வாறான பழக்கத்தில் ஆரம்பித்த தாலியை செய்யும் போது சரியான நாள், நட்சத்திரம், நேரம் ஆகியவற்றை கவனிக்கும் அதேநேரம் ஆகம முறைப்படி தாலி செய்யும் வழிமுறையை எம்முன்னோர்கள் எமக்கு காட்டியுள்ளனர்.

பொன்னுருக்குவதற்காகவே பிரத்தியேகமான பொன்னுருக்கு மணவறையை பழ முத்துக்கருப்பன் செட்டியார் ஜூவலர்ஸ் அமைத்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் இலகுவாக அமைந்துள்ளது.

கொழும்பில் பொன்னுருக்குவதற்காகவே பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட முதல் பொன்னுருக்கு மணவறை இதுவாகும்.

திருமணத்தில் பொன்னுருக்குதல் சம்பிரதாயத்திற்கு மிக முக்கியமான பங்கு உண்டு. வீடுகளில் பொன்னுருக்குதல் நிகழ்வை மேற்கொள்ளும் போது அதற்கான வசதிகளும் புனிதத் தன்மையும் குறைவாகவே இருக்கும்.

இதைக் கருத்திற் கொண்டே பொன்னுருக்கு மணவறையை பழ முத்துக்கருப்பன் செட்டியார் ஜூவலர்ஸ் அமைத்திருக்கின்றது.

இப்போது திருமணத்திற்கு முன்பாக புகைப்படம் எடுக்கும் Pre-Shoot கலாசாரம் பரவலாக உள்ளது. இந்த Pre-Shoot நிகழ்வுகளையும் பொன்னுருக்குதலில் இருந்தே ஆரம்பிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆப்கானிஸ்தானை அடித்து நொறுக்கிய வெஸ்ட் இண்டீஸ்.. 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

டி20 உலகக் கோப்பை தொடரின் 40-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட்...

20 ஓவர் உலக கோப்பை: சூப்பர்-8 முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா-அமெரிக்கா மோதல்

20 ஓவர் உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில்...

சென்னை-நாகர்கோவில் புதிய வந்தே பாரத் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க முடிவு

சென்னையில் இருந்து தென் மாவட்டப் பகுதிகளுக்கு செல்லும் ரெயில்களும் அங்கிருந்து சென்னைக்கு...

நியூசிலாந்தை 75 ரன்னில் சுருட்டி ஆப்கானிஸ்தான் அசுர வெற்றி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் கயனாவில் உளள்...