இளசுகள் ‘காதலில் விழ’ ஒரு வாரம் விடுமுறை

Date:

நாட்டின் மக்கள்தொகை எண்ணிக்கை அதிகரிக்க சீனா அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் முன்னெடுத்து வருகிறது. ஒருகாலத்தில் அதிகளவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் கொண்ட நாடாக சீனா விளங்கி வந்த நிலையில், மக்கள்தொகையை கட்டுப்படுத்த 1980இல் கறாரான சட்டங்களை போட்டது. ஒரு குழந்தைக்கு மேல் யாரும் பெற்றுக்கொள்ளக் கூடாது என சட்டம் இயற்றியதால் தற்போது அந்நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

கட்டுப்பாடு காரணமாக மக்கள் தொகையில் சமம் இன்மை ஏற்பட்டுள்ளதால், மீண்டும் மக்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஏதுவாக சட்ட திட்டங்களை சீனா அரசு 2015க்குப்பின் கொண்டுவரத் தொடங்கியது. பிறப்பு விகிதத்தை அதிகரிக்கு சுமார் 20க்கும் மேற்பட்ட யோசனைகளை சீனா அரசுக்கு நிபுணர்கள் வழங்கியுள்ளனர். இந்நிலையில், கல்லூரி படிக்கும் இளம் தலைமுறையினரை குறிவைத்து புதிய முன்னெடுப்பை சீனா அரசு மேற்கொண்டுள்ளது.

அந்நாட்டின் 9 முன்னணி கல்லூரிகள் ஒரு வார காலம் மாணவர்களுக்கு “fall in love” விடுமுறையை வழங்கியுள்ளனர். அந்நாட்டில் தற்போது வசந்த காலம் தொடங்கியுள்ள நிலையில், மாணவர்கள் இந்த விடுமுறை காலத்தை பயன்படுத்தி, இயற்கை, காதல் வாழ்க்கை ஆகியவற்றை நன்கு அறிந்து அனுபவிக்கலாம் என்ற நோக்கில் இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பிறப்புவிகித்தை உயர்த்தும் விதமாகவே புதுமண தம்பதிக்கு ஒரு மாதம் சம்பளத்துடன் விடுப்பு வழங்கும் திட்டத்தை சீனாவின் பல்வேறு மாகாணங்கள் அமல்படுத்தியுள்ளது. வரும் காலங்களில் இது போன்ற மேலும் பல யோசனைகளையும், திட்டங்களையும் சீனா செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தியா-ஆஸ்திரேலியா இன்று இரவு மோதல்

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு...

அமெரிக்காவை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து – 10 விக்கெட்களில் அபார வெற்றி

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற சூப்பர் 8 சுற்று...

வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது தென் ஆப்பிரிக்கா

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8...

சுதா கொங்கரா – STR50.. வெளியான புது அப்டேட்?

சிம்பு 'பத்து தல' திரைப்படத்திற்கு பிறகு தற்பொழுது மணி ரத்னம் இயக்கத்தில்...