உக்ரைனில் மேலும் ஒரு முக்கிய நகரத்தை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு

Date:

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்த சண்டை நீடித்து வருகிறது. இதில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியது.

இருந்தாலும் உக்ரைனும் ரஷியாவுக்கு போரில் கடும் சவால் அளித்து வருகிறது. இதனால், சண்டை தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கும் நிலையில், தற்போது ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்கிடையே கிழக்கு உக்ரைனில் உள்ள முக்கிய பக்முத்தை கைப்பற்ற ரஷிய படைகள் சில மாதங்களாக சண்டையிட்டு வந்தது. இதில் ரஷிய தனியார் படையான வாக்னர் குழுவினர் ஈடுபட்டனர்.

அவர்களை எதிர்த்து உக்ரைன் ராணுவம் கடுமையாக போரிட்டது. சில நாட்களுக்கு முன்பு பக்முத் நகரின் பெரும்பாலான பகுதியை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக ரஷியா அறிவித்தது.

விரைவில் அந்நகரை கைப்பற்றுவோம் என்று தெரிவித்தது. இந்த நிலையில் பக்முத் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டதாக ரஷியாவின் வாக்னர் குழுவின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் முக்கிய நகரை கைப்பற்றியதற்கு ரஷிய படைக் குழுவுக்கும் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தியா-ஆஸ்திரேலியா இன்று இரவு மோதல்

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு...

அமெரிக்காவை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து – 10 விக்கெட்களில் அபார வெற்றி

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற சூப்பர் 8 சுற்று...

வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது தென் ஆப்பிரிக்கா

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8...

சுதா கொங்கரா – STR50.. வெளியான புது அப்டேட்?

சிம்பு 'பத்து தல' திரைப்படத்திற்கு பிறகு தற்பொழுது மணி ரத்னம் இயக்கத்தில்...