”உங்கள பார்க்கணும்னு தோணுச்சு.. வந்தேன்..”

Date:

தமிழ் சினிமாவில் துணை வேடங்களில் நடித்து வந்த நடிகர் விஜய் சேதுபதி, 2010 ஆம் ஆண்டு வெளியான “தென் மேற்கு பருவக்காற்று” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்த அவர், ரஜினிநடித்த பேட்ட படத்தின் மூலம் வில்லனாக தோன்றினார். பின்னர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் வில்லனாக தோன்றி பாராட்டைப் பெற்றார்.

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர். தாநாயகனாக மட்டுமில்லாமல் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அண்மையில் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் வாத்தியாராக நடித்து மிரட்டியிருந்தார்.

நடிகர் விஜய் சேதுபதி படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும் பாலிவுட்டில் வெளியான ‘ஃபார்ஸி’ இணையத் தொடரில் ஷாஹித் கபூருடன் இணைந்து நடித்தார். இந்த வெப் சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் தமிழில் முதன்முறையாக நடிக்கும் வெப் சீரிஸை ‘காக்கா முட்டை’, ‘கடைசி விவசாயி’ புகழ் இயக்குநர் மணிகண்டன் இயக்குகிறார். இதற்கான அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது.

நடிகர் விஜய் சேதுபதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குட்டி ரசிகருடன் பேசும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், கட்டடத் தொழிலாளியின் மகன் என சொல்லிக் கொண்டு விஜய்சேதுபதியிடம் பேசும் அந்த குழந்தையிடம் எதுக்கு இங்க வந்தீங்க என விஜய்சேதுபதி ஆர்வமாக கேட்க, “இந்தா உங்களை பார்க்கணும்னு தோணுச்சு.. அதான் வந்தேன்” என்று தனது மழலை குறலில் கூறும்.

https://www.instagram.com/reel/CqqcYR9vApp/

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆப்கானிஸ்தானை அடித்து நொறுக்கிய வெஸ்ட் இண்டீஸ்.. 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

டி20 உலகக் கோப்பை தொடரின் 40-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட்...

20 ஓவர் உலக கோப்பை: சூப்பர்-8 முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா-அமெரிக்கா மோதல்

20 ஓவர் உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில்...

சென்னை-நாகர்கோவில் புதிய வந்தே பாரத் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க முடிவு

சென்னையில் இருந்து தென் மாவட்டப் பகுதிகளுக்கு செல்லும் ரெயில்களும் அங்கிருந்து சென்னைக்கு...

நியூசிலாந்தை 75 ரன்னில் சுருட்டி ஆப்கானிஸ்தான் அசுர வெற்றி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் கயனாவில் உளள்...