பதுளை மாவட்டத்தில் 47,665 குடும்பங்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் தமயந்தி பரணகம தெரிவித்துள்ளார்.
இது பதுளை மாவட்ட மக்கள் தொகையில் 17% எனவும் தமயந்தி பரணகம குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் பதுளையில் (இன்று 20) இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
பதுளை மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 10,873 ஆக காணப்படுவதுடன், இது 5 வயதுக்குட்பட்ட மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையில் 19% எனவும் தமயந்தி பரணகம சுட்டிக்காட்டியுள்ளார்.
உடற்திணிவு சுட்டெண் 18க்கும் குறைந்த 12 வாரங்கள் பூர்த்தி செய்யப்பட்ட 1,226 கர்ப்பிணி பெண்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.