உதயநிதியின் ‘மாமன்னன்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

Date:

‘கர்ணன்’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இப்படத்தில், இடம்பெற்றுள்ள ‘நெஞ்சமே நெஞ்சமே’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘சிட்டுக்குருவிகளை நோக்கி அச்சிறுவன் வீசியெறிந்த கல்லில் வந்தமர்ந்தது மணிப்புறா’ என்று தொடங்கும் இந்த பாடலின் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார். விஜய் யேசுதாஸ் மற்றும் சக்தி ஸ்ரீ கோபாலன் இணைந்து பாடியுள்ள இந்த பாடலின் லிரிக் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து ட்ரெண்டாகி வருகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நியூசிலாந்தை 75 ரன்னில் சுருட்டி ஆப்கானிஸ்தான் அசுர வெற்றி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் கயனாவில் உளள்...

வேலை காட்டிய எலான் மஸ்க் – எக்ஸ் தளத்தில் புது அப்டேட்.. வாயடைத்து போன இளசுகள்

உலக மக்களால் அதிகமாக பயன்படுத்தபடும் செயலியாக திகழ்கிறது எக்ஸ்.இதற்குமுன் டுவிட்டர் என்றழைக்கப்பட்ட...

வரலாற்று சாதனை படைத்த அமெரிக்க அணியில் முன்னாள் இந்திய வீரர்

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும்...

ஹர்திக் பாண்ட்யாவின் செயல்.. சுப்மன் கில் அவமதிக்கப்பட்டாரா? வைரல் வீடியோ

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் நேற்று முன்...