எதிரிகளைக் கண்காணிப்பதற்கான உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளும்படி வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன், அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தனது மகளுடன் அந்நாட்டு விண்வெளி மேம்பாட்டு மையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக வடிவமைத்துள்ளதாகக் கூறினார்.
அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இதுபோன்ற உளவு செயற்கைக்கோள்களை அதிகளவில் தயாரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், புதிதாக வடிவமைத்துள்ள செயற்கைக்கோளை திட்டமிட்டபடி விண்ணில் செலுத்தும்படி கிம் ஜாங் அன் உத்தரவிட்டார்.