எக்ஸ்பிரஸ் பேர்ல் சம்பவம் தொடர்பில் சஜித்தின் சந்தேகங்கள்

Date:

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் மூலம் நமது கடற்பரப்பில் அதிக அளவு இரசாயனங்கள் கலந்ததால் சுற்றுச்சூழலுக்கும் மீனவர்களுக்கும் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதற்கு முன் நிவ் டயமன்ட் விபத்து இடம் பெற்றதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த சம்பவத்திற்கு பிறகு கடற்ப்பரப்பை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சரியாக எடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இந்நிகழ்வுகளை பார்க்கும் போது இதில் ஒரு சதி நடந்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

உலக நாடுகள் பசுமைப் பொருளாதாரம், நீலப் பொருளாதாரம் குறித்து பேசினாலும், நமது நாட்டில் அது வெறும் வார்த்தைகளில் மட்டும்தான் இருப்பதாகவும், அமைச்சுக்களை பகிர்ந்தளிப்பதன் மூலம் இது மேலும் தெளிவாகுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

கோட்டாபய ஜனாதிபதி அன்று செயற்பட்டது போன்று எந்த மாற்றமும் இன்றி தற்போதைய ஜனாதிபதியும் செயற்படுவதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், நிவ் டயமன்ட் சம்பவத்திற்குப் பிறகு அரசாங்கம் எடுத்த நடவடிக்கை யாது என தான் கேள்வி எழுப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மீண்டும் அவ்வாறானதொன்றிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் தெளிவான நோக்கம் தனக்கு இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் பேர்ல், நிவ் டயமன்ட் ஆகிய இரு துயர சம்பவங்களில் இருந்தும் இந்த அரசாங்கம் இன்னும் பாடம் கற்கவில்லை எனவும், இந்த முறையற்ற போக்கால் நாடு பெரும் இழப்பை சந்தித்துள்ளதாகவும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் கசிவு இருப்பது முதற்கட்டமாக கண்டுபிடிக்கப்பட்டாலும், அதை அந்நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதித்த தரப்பினர் யார் என்பது தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உலகில் மிக உயர்தரத்திலான சேவைகளைக் கொண்ட துறைமுகம் எங்களிடம் காணப்பட்டாலும் இந்த விபத்தின் போது, அதைத் தடுக்கத் தேவையான உபகரணங்கள் எங்களிடம் இருக்கவில்லை எனவும், இந்த அரசாங்கம் கப்பலை காப்பாற்ற முயற்சித்ததாகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய இந்த விவாதத்தை நிறுத்த பாரிய சதி நடந்ததாகவும், தாம் கப்பல் தரப்பு சார்பில் பேசவில்லை எனவும், நாட்டு மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் தரப்பினர் சார்பாகவே பேசுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டினார்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீபற்றியதால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் இன்று (10) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...