தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
சமீபத்தில் இவர் நடிப்பில் தசரா திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்தனர்.
தற்போது கீர்த்தி சுரேஷ் உதயநிதியின் மாமன்னன் படத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு பிரமாண்டமாக நடந்தது.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் கீர்த்தி சுரேஷ் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், “நான் பார்த்ததிலேயே என்னுடைய மனைவிக்கு அடுத்து கீர்த்தி சுரேஷ் தான் அழகு” என்று கூறியுள்ளார்.