இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள படம் ‘பொம்மை’. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது. மேலும், சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியானது.
இந்நிலையில், ‘பொம்மை’ திரைப்படத்தின் ரிலீஸ் திகதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 16-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
#BOMMAI releasing world wide on JUNE16th 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 @thisisysr 🥰 @priya_Bshankar 🥰 @Radhamohan_Dir 🥰 @Richardmnathan 🥰 @editoranthony 🥰 @KKadhirr_artdir 🥰 @kannan_kanal 🥰@madhankarky 🥰 pic.twitter.com/6q3uQAT7wA
— S J Suryah (@iam_SJSuryah) June 1, 2023