கடந்தகால காதல் குறித்து மனம் திறந்த பிரியங்கா சோப்ரா…!

Date:

2000ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய் ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

2018 ஆம் ஆண்டு அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்தி திரையுலகில் தனக்கு பட வாய்ப்பு கிடைக்க விடாமல் ஒரு கும்பல் சதி செய்ததாக புகார் தெரிவித்து இருந்தார்.

நடிகை பிரியங்கா சோப்ரா மிகவும் மனம் திறந்து பேசும் தைரியம் கொண்ட நடிகை. பிரியங்கா அடிக்கடி தனது எண்ணங்களை தயக்கமின்றி பகிரங்கமாக வெளிப்படுத்தி, அதற்காக பாராட்டுகளை பெற்று வருகிறார்.

இப்போது, ஒரு நிகழ்ச்சியில் பிரியங்கா தனது முன்னாள் காதல் உறவுகள் குறித்து வெளிப்படுத்தியிருப்பது.

ஒரு காலத்தில் தான் ஒரு காதலில் இருந்து இன்னொரு காதலுக்கு பயணித்ததாகவும், அப்போது தன் தவறுகளை புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் பிரியங்கா கூறி உள்ளார்.

எனது முன்னாள் காதலர்கள் அனைவரையும் சிறந்த ஆளுமை கொண்டவர்கள் ஆனால் அந்த காதல்கள் அனைத்தும் தோல்வியடைக் காரணம் கருத்து வேறுபாடுகள் – அல்லது ஒற்றுமையின்மை.

‘உறவுகளுக்கு இடையே நான் நேரம் ஒதுக்கவில்லை. என்னுடன் பணியாற்றிய பல நடிகர்களை காதலித்தேன். உறவு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி எல்லாம் எனக்கு தெரியும் என்பது என் எண்ணமாக இருந்தது.

எனது யோசனைகளுக்கு ஏற்ப உறவுகளை மேம்படுத்த முயற்சித்தேன். ஆனால் பல உறவுகள் மிகவும் மோசமாக முடிவடைகின்றன. ஆனால் அவை எதுவும் மோசமானவை என்று சொல்ல முடியாது. அவர்கள் அனைவரும் சிறந்த ஆளுமை கொண்டவர்கள்.மிகவும் அற்புதமானவர்கள்.

என் கணவர் என் வாழ்க்கையில் வருவதற்கு முன்பே நான் காதல் உறவுகளில் இருந்து விலகி விட்டேன். நான் ஏன் தொடர்ந்து அதே தவறுகளை செய்கிறேன் என்பதை நான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.

எனது வேலை அல்லது மற்ற விஷயங்களை என் துணைக்காக ஒதுக்கி வைப்பதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. நான் எனக்காக நிற்கவில்லை. ஒரு உறவு முறிந்த பிறகு உடனடியாக அடுத்த உறவில் உடனடியாக குதிக்க கூடாது என்பது எனக்கு புரிந்தது.

நான் என்னை நானே அழித்துக் கொண்டிருக்கிறேனா என்று யோசித்தேன்.என் குடும்பம் மற்றும் என்னை உண்மையாக நேசிக்கும் நபர்களைத் தவிர எனக்கு வேறு யாரும் இல்லை என்பதை உணர்ந்தேன்.

காதல் உறவில் நுழையும் போது, எனக்குச் சொந்தமான அனைத்தையும் மறந்து மறைந்து போகும் நிலை இருந்தது. எனது பெரும்பாலான உறவுகளில் நான் கண்ணுக்குத் தெரியாதவளாக மாறிவிட்டேன் என மனந்திறந்து கூறி உள்ளார்.

நடிகர் ஷாருக்கானும் பிரியங்கா சோப்ரா இருவரும் 2013 ஆம் ஆண்டு ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக வதந்தி பரவியது.

ஷாருக்கான் மற்றும் பிரியங்கா சோப்ரா முதன்முறையாக 2006 இல் பர்ஹான் அக்தரின் டான் படத்திற்காக இணைந்து நடித்தனர். அவர்கள் மீண்டும் 2011 இல் டான் 2 இல் ஒன்றாகத் திரையில் தோன்றினர்.

இதைத் தொடர்ந்து, இருவரும் கிட்டத்தட்ட எல்லா பொது இடங்களிலும், இரவு நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக தோன்றினர். அவர்களுக்கு இடையே காதல் இருப்பதாக கூறப்பட்டது.

இருப்பினும், தானும் பிரியங்காவும் ‘நல்ல நண்பர்கள்’ என்று ஷாருக்கான கூறி வந்தார்.

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐதராபாத்தை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை தட்டி தூக்கியது கொல்கத்தா

ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டியில் ஐதராபாத் - கொல்கத்தா மோதின. இதில் டாஸ்...

இறுதி போட்டியில் ஐதராபாத் தோல்வி: கண்ணீர் விட்டு அழுத காவ்யா மாறன்- வீடியோ வைரல்

ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ்...

ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா அணிக்கு மம்தா வாழ்த்து

ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று...

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...