கடந்த 2009ம் ஆண்டு ஜோர்டான் மன்னர் அப்துல்லா-வின் வாரிசாக ஹூசைன் பின் அப்துல்லா அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் பட்டத்து இளவரசரான ஹூசைன் பின் அப்துல்லா(28), சவுதி அரேபியாவில் பிரபலமான குடும்பத்தை சேர்ந்த ராஜ்வா அல் சைஃப்(29) என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
Watch: Rajwa Al Saif arrives at Zahran Palace for her wedding to Jordan’s Crown Prince Al Hussein.#RoyalWedding #CelebratingAlHusseinhttps://t.co/dZg5RIfRNg pic.twitter.com/3iL3ATstVG
— Al Arabiya English (@AlArabiya_Eng) June 1, 2023
இளவரசரின் மறைந்த பெரிய பாட்டிக்காக வடிவமைக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் V காரில் மணமகள் ராஜ்வா அல் சைஃப் அவருக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு வெள்ளை நிற உடையில் திருமணம் நடைபெறும் சஹ்ரான் அரண்மனைக்கு வந்தார்.
இளவரசர் ஹூசைன் பின் அப்துல்லா இராணுவ உடையில் சஹ்ரான் அரண்மனையில் தோன்றினார். இதையடுத்து சஹ்ரான் அரண்மனையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற விழாவில் இருவரும் மிகுந்த மகிழ்ச்சிக்கு இடையே திருமணம் செய்து கொண்டனர்.
Jordan’s Crown Prince Al Hussein and his bride Rajwa Al Saif exchange rings during the wedding ceremony. #RoyalWedding #CelebratingAlHusseinhttps://t.co/dZg5RIfRNg pic.twitter.com/qXg4QXD813
— Al Arabiya English (@AlArabiya_Eng) June 1, 2023
திருமணம் நடைபெற்ற கையோடு புதிதாக திருமணம் முடிந்த அரச ஜோடி பல பாதுகாப்புக்கு மத்தியில் ஊர்வலம் சென்றனர்.
இவர்களது திருமண நிகழ்ச்சிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், வளைகுடா மன்னர்கள் மற்றும் நெதர்லாந்து மன்னர் என சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
இந்த ஜோடி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 திகதி திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Watch: Britain's Prince William and Princess Kate arrive for the wedding reception of Jordan's Crown Prince Al Hussain and Princess Rajwa. #RoyalWedding #CelebratingAlHussein https://t.co/dZg5RIfjXI pic.twitter.com/hLrVlEdbyh
— Al Arabiya English (@AlArabiya_Eng) June 1, 2023