‘இந்தியன்-2’ படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இதில் வரும் வயதான கதாபாத்திரத்துக்காக, கமல்ஹாசன் தினமும் 4 மணி நேரம் ‘மேக்கப்’ போடுகிறாராம்.
இந்த ‘மேக்கப்’ 6 மணி நேரம் மட்டுமே கைகொடுக்கும் என்பதால், அந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் மட்டுமே படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். இடைப்பட்ட நேரத்தில் கமல்ஹாசன் எந்தவிதமான திட உணவுகளையும் எடுத்துக்கொள்வதில்லையாம்.
இந்த வயதிலும் சினிமாவுக்காக உலகநாயகன் காட்டும் அர்ப் பணிப்பு, படக்குழுவினரை ஆச்சரியப்பட வைக்கிறதாம்.