கறவை பசுக்களை எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு நிழலான இடங்களில் கட்டி வைக்குமாறு மில்கோ நிறுவனம் கோரியுள்ளது.
இன்றும் நாளையும் கடும் வெப்பமான வானிலை நிலவுவதன் காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல், கிழக்கு, வடமத்திய, தென் மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, குருநாகல் மாவட்டங்களிலும் இன்றும் நாளையும் கடும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.