திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இரவு நேர அஞ்சல் தொடரூந்தில், நேற்று 8 இரவு ஹபரணை – ஹதரஸ்கொட்டுவ பகுதியில் இரண்டு காட்டு யானைகள் மோதி உயிரிழந்துள்ளன.
இதனால் குறித்த தொடரூந்து தடம்புரண்டுள்ளதாக ஹபரணை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஹுருலு சூழலியல் பூங்காவில் இருந்து வந்த காட்டு யானைகளே தொடரூந்தில் மோதியதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடரூந்து தடம் புரண்ட போதிலும் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடரூந்து மார்க்கத்தை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.