காதலை மண்டியிட்டு தெரிவிக்க, காதலனோ சிரிக்க… திகைத்த காதலிக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்

Date:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் டிஸ்னிலேண்ட் பூங்கா அமைந்து உள்ளது. இதில், தம்பதி, குடும்பத்தினர் என பலரும் பொழுதுபோக்கிற்காக வந்தனர். அவர்களில், காதல் ஜோடி ஒன்று, தங்களது அன்பை பரிமாறி கொண்டிருந்தது.

அப்போது, காதல் வசப்பட்ட அந்த இளம்பெண் முன்பே யோசித்து வைத்திருந்தபடி, காதலரின் முன்பு மண்டியிட்டு தனது அன்பை வெளிப்படுத்தினார். திருமணம் செய்து கொள்ளலாம் என்பதற்கான எண்ண வெளிப்பாடாக மோதிரம் ஒன்றையும் எடுத்து காண்பித்து உள்ளார்.

ஆனால், இதனை பார்த்த காதலர் கடகடவென சிரித்து உள்ளார். காதலியின் அன்பை ஏற்காமல் நின்றுள்ளார். இதனால், என்னவென தெரியாமல் சற்று நேரம் காதலி திகைத்து போயுள்ளார்.

ஆனால், அந்த காதலர் அடுத்து நடந்து கொண்டது காதலியை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காதலியின் முன்னே சற்று குனிந்தபடி தனது அரைக்கால் சட்டையில் இருந்த பெட்டி ஒன்றை எடுத்து உள்ளார்.

அதில் இருந்த மோதிரம் ஒன்றை கையில் எடுத்து, அவரும் மண்டியிட்டு காதலை வெளிப்படுத்தினார். காதலியை போன்று காதலரும் கூட, பூங்காவுக்கு இதே யோசனையுடன் வந்து உள்ளார். இருவருக்கும், மற்றவரின் யோசனை தெரியவில்லை.

ஆனால், அவர்களின் காதலை போன்று, எண்ணமும் ஒன்றாகவே இருந்தது. இதனால், இருவரும் அடக்க முடியாமல் சிரிப்பை வெளிப்படுத்தினர்.

இந்த வீடியோ, வைரலாகி வருகிறது. இதற்கு 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக்குகளை குவித்து உள்ளனர். எங்களுக்கும் கூட இதேபோன்று அனுபவம் ஏற்பட்டது என்றும், நாங்கள் கணவன், மனைவியாக இருக்கிறோம் என்றும் ஒருவர் தெரிவித்து உள்ளார். இதனால், எங்களிடம் 4 நிச்சயதார்த்த மோதிரங்கள் உள்ளன என்றும் தெரிவித்து உள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தியா-ஆஸ்திரேலியா இன்று இரவு மோதல்

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு...

அமெரிக்காவை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து – 10 விக்கெட்களில் அபார வெற்றி

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற சூப்பர் 8 சுற்று...

வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது தென் ஆப்பிரிக்கா

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8...

சுதா கொங்கரா – STR50.. வெளியான புது அப்டேட்?

சிம்பு 'பத்து தல' திரைப்படத்திற்கு பிறகு தற்பொழுது மணி ரத்னம் இயக்கத்தில்...