அன்மையில் காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து, தலைமைச் செயலாளர் இறையன்பு, கர்நாடக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவேண்டும் என கர்நாடக அரசுக்கு தலைமை செயலாளர் இறையன்பு வலியுறுத்தியுள்ளார். பெங்களூருவில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுகள் மற்றும் இதர கழிவுகள் காவிரியில் கலக்கிறது என இறையன்பு அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.