கிரிக்கெட் வீரரை காதலித்த ஐஸ்வர்யா லட்சுமி

Date:

தமிழில் விஷாலின் ஆக்ஷன், தனுசுடன் ஜெகமே தந்திரம், ஆர்யாவின் கேப்டன் படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. கட்டா குஸ்தியில் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வலுவான கதாபாத்திரம் அமைந்தது.

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் வந்தார். மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி அளித்துள்ள பேட்டியில், “நான் பிறந்தபோது என் அப்பா எனக்கு ஸ்ரீ லட்சுமி என்று பெயர் வைத்தார். அம்மா ஐஸ்வர்யா என்று பெயர் வைத்தார்.

கடைசியில் ஐஸ்வர்யா லட்சுமி ஆனேன். எனக்கு லட்சிய கதாபாத்திரம் எதுவும் இல்லை. ஆனால் வில்லி வேடங்களில் நடிக்க பிடிக்காது. வில்லியாக நடிக்க கூடாது என்று முடிவு செய்து இருக்கிறேன்.

காஞ்சீபுரம் பட்டு புடவைகள் கேரளா சம்பிரதாய புடவைகள் என்றால் மிகவும் பிடிக்கும். ஓய்வாக இருக்கும்போதெல்லாம் புடவைகளைக் கட்டிக் கொண்டு போட்டோ எடுத்துக் கொள்வேன்.

அபிஷேக் பச்சன் மற்றும் விஜய் படங்கள் அதிகமாக பார்ப்பேன். கிரிக்கெட் விளையாட்டு வீரர் யுவராஜ் சிங் என்றால் மிகவும் இஷ்டம். ஆறாம் வகுப்பில் தொடங்கி பன்னிரெண்டாம் வகுப்பு வரை அவரை மனதிற்குள் காதலித்து கொண்டே இருந்தேன். இப்போது கிரிக்கெட் பார்க்க நேரமே இல்லை” என்றார்.

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...