கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் இன்று (28) அதிகாலை துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
காரில் பயணித்தவர்களை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த 38 வாயதான ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காரில் பயணித்த காயமடைந்த நபர் உள்ளிட்ட மூவர் கனகபுரம் பகுதிக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தை அடுத்தே இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.