வரட்சியான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதே நிலை நீடித்தால், குடிநீர் விநியோகம் தடைப்படும் அபாயம் உள்ளதாக வாரியம் தெரிவித்துள்ளது.
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மின்சார தேவையும் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நேற்று (23) தினசரி மின் தேவை 45 கிகாவோட்டாக அதிகரித்துள்ளது.
மாலை ஏழு மணியளவில் அதிகபட்சமாக 2,097 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் தம்மிக்க என். நவரத்ன எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.