ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாடல் அழகி சியன்னா வெயிர் (வயது 23). 2022-ம் ஆண்டு நடந்த பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்து கொண்ட அவர், இறுதி போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டவர்.
கடந்த ஏப்ரல் 2-ம் திகதி ஆஸ்திரேலியாவில் வின்ட்சார் போலோ கிரவுண்டில் குதிரை சவாரி மேற்கொண்டார்.
அப்போது, அவரது குதிரை திடீரென சரிந்து, விழுந்து உள்ளது.
சியன்னாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக மீட்டு, வெஸ்ட்மீட் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பல வாரங்களாக உயிர் காக்கும் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வந்தது.
ஆங்கில இலக்கியம் மற்றும் உளவியல் பாடங்களில் இரட்டை பட்டப்படிப்பை படித்து உள்ள அவர், 3 வயது இருக்கும்போது, குதிரை சவாரி செய்ய தொடங்கினார்.