கைப்பேசியில் பதிவான பிக் மெட்ச் விபத்துக்கள்!

Date:

இந்த நாட்களில் பாடசாலைகளுக்கு இடையில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியினால் பல்வேறு விபத்துக்கள் பதிவாகி வருகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில், மற்றுமொரு பிக் மேட்ச் போட்டிக்கு வந்திருந்த மாணவர்கள் குழுவொன்று எதிர்கொண்ட எதிர்பாராத சம்பவங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பதிவாகியுள்ளன.

ஹம்பாந்தோட்டை, வீரகெடிய பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலையொன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகன பேரணியின் போது, ​​வீதியில் வாகனங்கள் பாதுகாப்பற்ற முறையில் செலுத்தப்படுவதுடன், மாணவர்கள் குழுவொன்று விபத்தில் சிக்குவதும் கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியுள்ளது.

தங்காலை பிரதேசத்தில் இவர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

நேற்றைய தினம் இரு பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிக்காக காலி வீதியை அலங்கரிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 1ஆம் திகதி பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற பிக் மேட்ச் போட்டியின் போது வீதியில் வாகன கண்காட்சியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் 07 மாணவர்கள் காயமடைந்ததுடன் இருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தியா-ஆஸ்திரேலியா இன்று இரவு மோதல்

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு...

அமெரிக்காவை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து – 10 விக்கெட்களில் அபார வெற்றி

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற சூப்பர் 8 சுற்று...

வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது தென் ஆப்பிரிக்கா

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8...

சுதா கொங்கரா – STR50.. வெளியான புது அப்டேட்?

சிம்பு 'பத்து தல' திரைப்படத்திற்கு பிறகு தற்பொழுது மணி ரத்னம் இயக்கத்தில்...