மலேசியாவில் இருந்து 847 பயணிகளை ஏற்றிய Viking Neptune சொகுசு கப்பல் இன்று காலை நாட்டை வந்தடைந்தது.
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள இந்த கப்பல், எதிர்வரும் மார்ச் 27ஆம் திகதி பிற்பகல் நாட்டிலிருந்து புறப்பட்டு தென்னிந்தியாவின் கொச்சி துறைமுகத்திற்கு செல்லவுள்ளதாக கொழும்பு துறைமுகத்தின் ஹார்பர் மாஸ்டர் நிர்மல் சில்வா தெரிவித்தார்.
455 பேர் கொண்ட ஊழியர்களுடன் பயணிக்கும் இந்த கப்பல், இலங்கை உள்ளிட்ட சுமார் 30 நாடுகளுக்கு செல்லவுள்ளது.