காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சமுத்திராதேவி தொடரூந்தின் பயணிகள் பெட்டிகளை பிரிந்து, அதன் எஞ்சின் மாத்திரம் பயணித்துள்ளது.
இன்று 09 களுத்துறை- வடக்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
களுத்துறை-வடக்கு தொடரூந்து நிலையத்திற்கும், களுத்துறை இலக்கம் 1 தொடரூந்து நிலையத்திற்கும் இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தொடரூந்து திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தொடரூந்தின் இயந்திரம், தொடரூந்து பெட்டிகளிலிருந்து பிரிந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் வரை பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், சுமார் 15 நிமிடங்களின் பின்னர் தொடரூந்து மீண்டும் சீர்செய்யப்பட்டு, மருதானை நோக்கி பயணத்தை ஆரம்பித்ததாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.