சிக்கலில் சிக்கிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்…!

Date:

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பொறுப்பில் இருக்கிறார். கடுமையான போட்டிகளுக்கு நடுவில் இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட ரிஷி தொடர்ந்து சில சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கேபினட் உறுப்பினர் தேர்வில் குளறுபடி, அதிகாரிகளிடம் அநாகரீகமாக நடந்து கொண்டது என பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட ரிஷி இப்போது புதிய சிக்கல் ஒன்றை எதிர்கொண்டுள்ளார்

கடந்த பட்ஜெட்டின் போது குழந்தைகள் நலன் அமைப்புகளுக்கான நிதி சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இரட்டிப்பாக்கபடும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் மூலம் ரிஷி சுனக்கின் மனைவி பங்குதாரராக இருக்கும் கோரு கிட்ஸ் என்னும் நிறுவனம் ஆதாயம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சுதந்திர குடியரசுக் கட்சியின் துணைத் தலைவர் வெண்டி சேம்பர்லேன் வலியுறுத்தியிருந்தார். இந்த விவகாரம் குறித்து தொழிலாளர் கட்சியினரும் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.

மேலும், ரிஷி சுனக் வைத்திருக்கும் பங்குகள் குறித்து முறையாக கணக்கு காட்டவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷசதா மூர்த்தி பங்கு தாரராக இருக்கும் குழந்தை பராமரிப்பு நிறுவனமான கோரு கிட்ஸ் நிறுவனத்தில் அக்ஷதா மூர்த்தி வைத்திருக்கும் பங்குகள் குறித்தே இப்போது நாடாளுமன்ற தர நிர்ணய ஆணையர் டேனியல் கிரீன்பெர்க் தலைமையிலான குழு விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முதலீடுகள் குறித்த தகவல்களை வெளிப்படையாகப் பகிர வேண்டும் என்ற நிலையில், அப்படிச் செய்யத் தவறியுள்ளதாகவும் இதன் காரணமாகவே விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் விதிகள் அனைத்தும் முறையாகவே கடைப்பிடிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த விசாரணைக்கு நிச்சயம் ஒத்துழைப்போம் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு பிரதமர் பதவிக்கு வந்த ரிஷி சுனக் தொடர்ச்சியாகச் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். முதலில் போரீஸ் ஜான்சனின் அரசில் நிதியமைச்சராக இருந்தபோது லாக்டவுன் விதிகளை மீறிய புகாரில் சிக்கினார். அடுத்து சீட் பெல்ட் அணியாமல் இருந்தது, வளர்ப்பு நாயைப் பார்த்துக் கொள்ளாமல் பூங்காவில் உலாவ விட்டது என்று வரிசையாகச் சர்ச்சையில் சிக்கியிருந்தார்.

பிரதமராக வருவதற்கு முன்னரே வேறு ஒரு சர்ச்சையிலும் சிக்கினார். அதாவது இங்கிலாந்து நாட்டு சட்டப்படி வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்திற்கு இங்கிலாந்து நாட்டிற்கு வரி செலுத்த தேவையில்லை. இதுவே சில மாதங்களுக்கு முன்பு பெரிய சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. பல ஆயிரம் கோடி வருமானத்திற்கு வரி கட்டாமல் இருப்பது எப்படி நியாயம் எனப் பலரும் கேள்வி எழுப்பினர். இதையடுத்து சுனக் பிரதமரான பிறகு சர்ச்சையைத் தவிர்க்க ஈட்டும் வருவாய்க்கு வரி செலுத்த ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தியா-ஆஸ்திரேலியா இன்று இரவு மோதல்

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு...

அமெரிக்காவை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து – 10 விக்கெட்களில் அபார வெற்றி

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற சூப்பர் 8 சுற்று...

வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது தென் ஆப்பிரிக்கா

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8...

சுதா கொங்கரா – STR50.. வெளியான புது அப்டேட்?

சிம்பு 'பத்து தல' திரைப்படத்திற்கு பிறகு தற்பொழுது மணி ரத்னம் இயக்கத்தில்...