சீனாவின் எச்சரிக்கையை மீறி தைவான் அதிபருடன் அமெரிக்க சபாநாயகர் சந்திப்பு

Date:

சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்திப்பதற்காக தைவான் அதிபர் சாய் இங்-வென் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதியாக இணைக்கும் முனைப்பில் சீனா பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் சமீப காலமாக இருநாடுகளுக்கும் இடையேயான போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளன. ஆனால் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது நாட்டின் முக்கிய தலைவர்களை அங்கு அனுப்பியது. அதன்படி அமெரிக்க நாடாளுமன்றத்தின் அப்போதைய சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனையடுத்து தைவான் கடற்பகுதியில் ஏவுகணை சோதனை நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டது.

தற்போதைய சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்திப்பதற்காக தைவான் அதிபர் சாய் இங்-வென் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சந்திப்பு நடைபெறக்கூடாது என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அதனை மீறி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு நூலகத்தில் இருவரும் சந்தித்து பேசினர். அப்போது தைவான் மீதான சீனாவின் அச்சுறுத்தலை ஒப்புக்கொண்டதாகவும், தைவானுக்கு தனது முழு ஆதரவை அமெரிக்கா வழங்கும் எனவும் உறுதியளிக்கப்பட்டதாக தெரிகிறது. அமெரிக்காவின் இந்த செயலானது சீனாவுக்கு மேலும் ஆத்திரத்தை மூட்டி உள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐதராபாத்தை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை தட்டி தூக்கியது கொல்கத்தா

ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டியில் ஐதராபாத் - கொல்கத்தா மோதின. இதில் டாஸ்...

இறுதி போட்டியில் ஐதராபாத் தோல்வி: கண்ணீர் விட்டு அழுத காவ்யா மாறன்- வீடியோ வைரல்

ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ்...

ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா அணிக்கு மம்தா வாழ்த்து

ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று...

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...