சுவிட்சர்லாந்து முழுவதும், வீட்டு வாடகைகள் உயர இருப்பதாகவும், அதை எதிர்கொள்ள வாடகை வீடுகளில் வசிப்போர் தயாராக இருக்குமாறும் செய்திகள் வெளியாகிவருகின்றன.
அதற்குக் காரணம், அதிகரித்துவரும் வட்டி வீதங்கள். பெடரல் வீட்டு வசதி அலுவலகம், ‘reference interest rate’ என்னும் ஒரு வட்டி வீதத்தை நிர்ணயிக்கிறது. அதன் அடிப்படையில்தான் வீடுகளின் உரிமையாளர்கள் வாடகைகளை நிர்ணயிக்கிறார்கள்.
தற்போது, இந்த வட்டி வீதம் 1.25 சதவிகிதமாக உள்ளது. ஆனால், அது 1.5 சதவிகிதமாக உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி வட்டி வீதம் 1.5 சதவிகிதமாக உயரும் பட்சத்தில், வீட்டு வாடகைகள் சுமார் 3 சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பொதுவாக, வீட்டு வாடகை உயர்வு அக்டோபர் மாதத்தில் அமுலுக்கு வரும் என்பதால், வரும் அக்டோபரில் வீட்டு வாடகைகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.