சூடானில் உள்நாட்டு போர் உச்சக்கட்டம்

Date:

சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவப்படைக்கும் இடையேயான சண்டையில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

வடகிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான சூடானில் அதிபர் ஒமர் அல்-பஷீர் நடத்தி வந்த சர்வாதிகார ஆட்சி, 2019 ஆம் ஆண்டு மக்கள் புரட்சியால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் ராணுவமும் ஜனநாயகத் தலைவர்களும் கூட்டாக அதிகாரங்களை பகிர்ந்து கொண்டு ஆட்சி நடத்தி வந்தனர். ஆனால், 2021 ல் ஏற்பட்ட ராணுவப் புரட்சி அந்த உடன்படிக்கையை முடிவுக்குக் கொண்டு வந்தது.

அதன் பின்னர், ராணுவ தளபதிகள் ஒருங்கிணைந்து இறையாண்மை கவுன்சில் என்ற பெயரில் குழு அமைத்து ஆட்சி நடத்தி வந்தனர். அதன் தலைவராக ராணுவ ஜெனரல் புர்ஹானும், துணைத் தலைவராக ஹெமெடியும் செயலாற்றி வந்தனர். மக்களின் தொடர் போராட்டத்தால், ஜனநாயக ரீதியான புதிய அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் அந்த குழு மேற்கொண்டு வந்தது.இதுவரை சுமூகமான உறவே நீடித்து வந்த நிலையில், ராணுவத்துடன் துணை ராணுவப் படைகளை இணைக்க வேண்டும் என்ற கருந்து எழுந்த போது இருபிரிவினர் இடையே மோதல் வெடித்தது.

தலைநகர் கார்டோமில் உள்ள அதிபர் மாளிகை, ராணுவ தளபதியின் இல்லம், 3 விமான நிலையங்கள் தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாக துணை ராணுவப் படைகள் தெரிவித்த நிலையில், மோதல் தீவிரமடைந்தது. இருதரப்பும் மாறி மாறி தாக்கிக்கொள்வதால், தலைநகர் கார்டோம் மற்றும் அதனை சுற்றிய நகரங்கள் கலவர பூமியாக மாறி உள்ளன. 4வது நாளாக மோதல் தொடரும் நிலையில், இந்தியர் உள்பட 200க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொள்ளப்பட்டுள்ளனர். 2,000 மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

மருத்துவமனைகள் சூறையாடியதால் மருந்து தட்டுப்பாடும் நிலவுகிறது. ஏற்கெனவே அங்கே உணவுத் தட்டுப்பாடு நிலவும் சூழலில் இந்தக் கலவரம் காரணமாக நிலவரம் இன்னும் மோசமடைந்துள்ளது. மின் தடை, உணவுப் பற்றாக்குறை போன்ற காரணங்களால் ரொட்டி, பெட்ரோலுக்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கிறார்கள். இது மட்டுமின்றி, காப்கபியா தளத்தில் நடைபெற்ற மோதலில் ஐ.நா. துணை அமைப்பான உலக உணவுத் திட்டப் பணியாளர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். சூடானுக்கான ஐரோப்பிய யூனியன் தூதர் அய்தான் ஓ ஹரா தாக்கப்பட்டார்.

சூடானில் முஸ்லிம்களே பிரதானமாக வாழ்கின்றனர். இது ரம்ஜான் புனித மாதம் என்பதால் முஸ்லிம் மக்கள் நோன்பு மேற்கொண்டுள்ள நிலையில், இந்தக் கலவரம் காரணமாக பண்டிகையும் பறிபோனது இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நியூசிலாந்தை 75 ரன்னில் சுருட்டி ஆப்கானிஸ்தான் அசுர வெற்றி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் கயனாவில் உளள்...

வேலை காட்டிய எலான் மஸ்க் – எக்ஸ் தளத்தில் புது அப்டேட்.. வாயடைத்து போன இளசுகள்

உலக மக்களால் அதிகமாக பயன்படுத்தபடும் செயலியாக திகழ்கிறது எக்ஸ்.இதற்குமுன் டுவிட்டர் என்றழைக்கப்பட்ட...

வரலாற்று சாதனை படைத்த அமெரிக்க அணியில் முன்னாள் இந்திய வீரர்

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும்...

ஹர்திக் பாண்ட்யாவின் செயல்.. சுப்மன் கில் அவமதிக்கப்பட்டாரா? வைரல் வீடியோ

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் நேற்று முன்...