சூடானில் வெடித்துள்ள உள்நாட்டுக் கலவரம்

Date:

சூடான் நாட்டில் ராணுவத்திற்கும், துணை காவல் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சூடான் நாட்டில் அந்நாட்டின் ராணுவ ஜெனரலான ஒமார் அல் பஷீரின் கீழான ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் ராணுவத்தின் இரு பிரிவுகளுக்கிடையே மோதல் எழுந்துள்ளது. ஆர்.எஸ்.எப் என்ற துணை ராணுவ படைகளை ராணுவத்துடன் இணைப்பது என அந்நாட்டு அரசு முடிவுசெய்தது. இதற்கு, துணை ராணுவ கமாண்டர் முகமது ஹம்தான் தக்லா எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் ராணுவ தளபதி அப்தல் பதா அல் பர்ஹான் படைகள் இணைப்பில் உறுதியாக இணைந்துள்ளார்.

இதனால் இரண்டு படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் சம்பவம் உள்நாட்டு போராக வெடித்துள்ளது. சூடான் துணை ராணுவ படையினரின் முகாமை சூடான் ராணுவத்தினர் தாக்கி வருகின்றனர். துணை ராணுவத்தினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் சூடானில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. மத்திய ராணுவத்தை அடித்து நொறுக்கிய துணை ராணுவம் சூடான் விமான நிலையம், அதிபர் மாளிகை உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்டமாக, அந்நாட்டு மருத்துவர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 180 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு படைப்பிரிவின் தளபதிகளுக்கிடையிலான கருத்து மோதல் பல மாதங்களாகவே நீடித்து வருகிறது. ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் சூடானில் ஜனநாயக ரீதியிலான ஆட்சியை கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டு வநத நிலையில் இந்த உள்நாட்டு போர் பொருளாதார ரீதியாகவும் பெரிய பின்னடைவை கொண்டு வரும் என அந்நாட்டு மக்கள் கவலையடைந்துள்ளனர்.

சூடான் நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் அந்நாட்டில் மீண்டும் மக்களாட்சி மலர வேண்டும் என முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், அதை குலைக்கும் வகையில் இரண்டு ராணுவப் படைப் பிரிவுகளும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைநகர கார்தோமின்(Khartoum) வீதிகளில் ட்ரக்குகளில் மெசின் கண்களை வைத்துக்கொடு ஒருவருக்கொருவர் சுட்டுக்கொண்டும், வெடி குண்டுகளை வீசிக்கொண்டும் இருப்பதால் தலைநகரமே போர்க்கோலம் பூண்டுள்ளது.

துணை ராணுவப்படையின் அதிகாரங்களை பிடுங்கும் செயலில் ராணுவ தளபதி ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டி வருகிறது துணை ராணுவப்படை. ராணுவ தளபதியை கிரிமினல் என்று ஆர்.எஸ்.எஃப். கமாண்டர் முகமது ஹம்தான் தக்லா குறிப்பிட்டுள்ளார். இது போன்ற மோசமான தாக்குதல்களை கார்தோம் நகரில் தாங்கள் இதுவரை பார்த்ததில்லை என அச்சமுடன் கூறுகிறார்கள் அந்நாட்டு பொதுமக்கள்.

எகிப்து, கத்தார், சவுதி அரேபியா மற்றும் துபாய் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் போரை நிறுத்த பேச்சுவார்த்தைக்கு வருமாறு போரில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. இது குறித்து அவசரமாக ஆலோசனை நடத்துமாறு இஸ்லாமிய நாடுகளுக்கு அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ஆண்டோனியா பிளிக்கென்  (secretary Antony blinken) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த  மோதல் சம்பவத்தில், கேரளாவை சேர்ந்த இந்தியர் ஒருவர் பலியாகியுள்ளார். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை தூதரகம் வழங்கும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைசச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...