சென்னை விமான நிலையத்தில் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது

Date:

1996-ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம், ‘இந்தியன்’. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இயக்குனர் ஷங்கர் படத்தை இயக்குகிறார். சமுத்திரகனி, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பிரியா பவானி சங்கர் போன்ற பிரபலங்களும் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

தற்போது ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. இதன் பெரும் பகுதிகள் சென்னை விமான நிலையத்தில் படமாக்கப்படுகின்றன. தேவையான இடங்களில் படப்பிடிப்பு நடத்த தயாரிப்பு நிறுவனம் அனுமதி பெற்று, ஜிஎஸ்டி உட்பட ரூ.1.24 கோடி கட்டணமாக விமான நிலைய நிர்வாகத்திடம் செலுத்தியுள்ளதாக தெரிகிறது.

அங்கு இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்றது. விமானம் புறப்படும் பகுதியில் மட்டுமே படமெடுக்க அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் படக்குழுவினர் விமான நிலையத்தின் கழிவறை பகுதியில் ஒரு காட்சியை படமாக்கியுள்ளனர். இதனால் விமான நிலைய அதிகாரிகள் முறையான அனுமதி இல்லை எனக் கூறி படப்பிடிப்பை நிறுத்தும்படி உத்தரவிட்டனர்.

இதனால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக படம் வெளியாகும் தேதி தள்ளிபோகும் என கூறப்படுகிறது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...

மகளிர் ஆசிய கோப்பை: இந்தியா வெற்றிபெற 109 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையின் தம்புள்ளவில் இன்று...

சர்வதேச தரத்தில் ஹிப்ஹாப் தமிழாவின் கடைசி உலகப் போர் – கிளிம்ப்ஸ் வீடியோ

2015 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான...

ஜப்பானில் அனுர..

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க...