டைரக்டரான நடிகர் மனோஜ்

Date:

தமிழில் தாஜ்மகால் படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் மனோஜ். தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், ஈர நிலம், மகா நடிகன், வாய்மை, மாநாடு உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தில் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். இவர் டைரக்டர் பாரதிராஜாவின் மகன் ஆவார்.

மனோஜ் அடுத்து டைரக்டராக அறிமுகமாகிறார். இவர் இயக்க உள்ள படத்தில் புதுமுக நடிகர், நடிகைகள் முதன்மை வேடங்களில் நடிக்க உள்ளனர். பாரதிராஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டைரக்டர் சுசீந்திரன் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.

படம் குறித்து மனோஜ் கூறும்போது, “குடும்ப பாங்கான கதையம்சத்தில் அனைவரும் ரசிக்கும் படமாக தயாராகிறது. இளைஞர்களை கவரும் அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கும். இசைக்கும் முக்கியத்துவம் இருக்கும். முதல் படத்திலேயே எனது தந்தையை இயக்குவது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...