பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் யாழ். நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ். நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஏ9 வீதி அருகே முல்லையடி பகுதியில் மின் கம்பத்துடன் மோதி வீட்டின் மதில் மேல் விழுந்து விபத்துகுள்ளானது.
இச்சம்பவமானது இன்று (13) காலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது எனவும் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.