திண்டிவனம்-நகரி ெரயில்பாதை நில உரிமையாளர்களிடம் இறுதி தீர்வு விசாரணை

Date:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி, செய்யாறு, ஆரணி உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஆந்திர மாநிலம் நகரிக்கு புதிய ெரயில்பாதை அமைக்கப்பட உள்ளது.

இதற்காக வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் 30 ஏக்கர் நிலம் தனிநபர்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட உள்ளது .இதையடுத்து இந்த நிலங்களுக்கு இழப்பீட்டு தொகை நிர்ணயம் செய்வது தொடர்பாக நில உரிமையாளர்களிடம் இறுதி தீர்வு விசாரணை கூட்டம் வந்தவாசியில் இன்று நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். அப்போது அவர், கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களுக்கு இழப்பீட்டு தொகை நிர்ணயம் செய்வது தொடர்பாக நில உரிமையாளர்களுக்கு விரிவாக எடுத்து கூறினார்.

இதில் வந்தவாசி தாசில்தார் கி.ராஜேந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுபாஷ்சந்தர், ெரயில்வே தனி தாசில்தார் வேணுகோபால், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...