சத்தீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டத்தை சேர்ந்த திலீப் ராவுஸ்கர் என்பவர், மின்சார துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த மே 5ஆம் திகதி அன்று, தனது மருமகளது திருமணத்திற்கு சென்றுள்ளார்.
இரவில் நடைபெற்ற அவ்விழாவில், மணமக்கள் உட்பட அனைவரும், கொண்டாட்டத்தில் நடனமாடியுள்ளனர். அப்போது உற்சாகமடைந்த திலீப் ராவுஸ்கர், அவர்களோடு சேர்ந்து நடனமாடியுள்ளார்.
தொடர்ந்து உறவினர்களோடு நடனமாடிக் கொண்டிருந்த திலீப்புக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
மேடையில் ஆடிக் கொண்டிருந்த அவர் திடீரென உட்கார்ந்து, சில நிமிடங்களில் மயங்கி விழுந்துள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடையவே, உடனே திலீப்பை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
10 May 2023 : 🇮🇳 : BSP engineer got 💔attack💉 while dancing at niece's wedding, died#heartattack2023 #TsunamiOfDeath pic.twitter.com/b0dNv3k2Av
— Anand Panna (@AnandPanna1) May 10, 2023
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் திலீப் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மேடையில் திலீப் நடனமாடுவதும், திடீரென மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
இந்நிலையில் திருமண நிகழ்வில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இத்துயர் மரணத்தால், மண விழாவில் இருந்த உறவினர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.